யாழ். புங்குடுதீவு கண்ணகிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைஐயா மகேந்திரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிந்திட்ட கண்ணீர் சிதறுவதை யாரறிவார்
வெந்திட்ட புண்ணில் வேல் பாச்சும் உலகத்தில்
சிந்தித்து நாம் வாழ்ந்த வாழ்வு
சிதறு தேங்காய்யானதய்யோ
நெஞ்சு பொறுக்குதில்லை
நீயில்லா வாழ்வையெண்ணி
கதறிய மனம் கலங்கிய வாழ்வு
ஐந்தாகிப் போனாலும்
உதறிடவெண்ணா உன் வாழ்வு
உயிர் நாடித் துடிப்பன்றோ
சிறுதவறேனும் இளைக்காமல்
சிந்தனையில் உனைநினைத்து
இருமனமும் ஒட்டியுறவாடிய வாழ்வில்
இடைபுகுந்து விரட்டியவன் யாரோ?
மறுபிறவியுண்டெனில் இந்திரனே நீயென்
மன்னவனாய் மாலையிடும் மணாளனாய்
வந்துதிக்க வல்லவனை வேண்டுகின்றேன்
அப்பா அப்பா என்று அழைத்திட்ட உதடுகள்
அணைத் உமை நினைத்து
அணைந்திடாது அடிக்கடி அழைக்கின்றது
நீங்களின்றி உலகானாலும்
உங்கள் நினைவுகளுடனே
நாம் வாழ்வோம் அன்புத் தந்தையே
உங்கள் ஆத்மா சாந்தியடைய நாள்தோறும்
இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும் மனைவி,
பிள்ளைகள், உறவினர்கள்.
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
அன்னாரின் குடும்பதினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். kuru .zurich