அமரர் திரேசம்மா அந்தோனிப்பிள்ளை
1938 -
2021
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தாயே
வானவீட்டில் நீ வாழவெளிக்கிட்டு வருடம் ஒன்றானது ----
வல்லவரின் வலதுபுறம் உன்னை வழியனுப்பிவிட்டு
இங்கே வலுவிழந்து கிடக்கின்றன
உன் நேசக்கரங்கள்---
பற்றவைத்த நெட்டை மெழுகுவர்த்தி
வாசலில் உன் வரவை காணாமல் உருகி
கட்டையாகி நிற்கின்றது----
நிஜத்தில் நீ இல்லாமல் போனதால் கனவு கூட எங்களை காண மறுக்கின்றது---
பதுவாலயா நாயகனின் ராசாத்தியே
நீ பற்றிநின்ற செவ்வரத்தம் பூக்கள் உன் பாதம் காணாமல் பதறிக்கிடக்கின்றன--
வா தாயே வா--
ஒற்றை சூரியன் மறைந்தும் வருவதில்லையா??
இலைஉதிர்த்த கிளைகள் தழைப்பதில்லையா??
கரை கடந்த அலைகள் மீண்டும் அதை தொடுவதில்லையா??
வா தாயே வா
Write Tribute
அஞ்சலிக்கின்றோம் ்அன்னை என்ற சொல்லுக்கும் ஆற்றல் தந்தவரே ஆசிரியைப் பணியை அழகாக்க் கடந்தவரே இறைவன் பாத்த்தை மலர்களால் அலங்கரிக்க விண்ணகம் சென்றுள்ளீர்கள் என எண்ணி மனதை ஆற்றுகின்றோம் ஆன்ம...