

-
16 NOV 1938 - 15 JAN 2021 (82 வயது)
-
பிறந்த இடம் : பருத்தித்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Toronto, Canada
யாழ். பருத்தித்துறை புனித அந்தோனியார் ஆலய பங்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரேசம்மா அந்தோனிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்தபோது கண்முன்னே
அம்மாவின் பாசநினைவுகள் தான்!
தாங்கிப் பிடிக்கின்றன மனதை!
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகிறேன்
இனிய தாயாக இல்லறத்தில்
வாழ்ந்தீர்கள் அம்மா!
ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள் அம்மா!
ஆண்டு ஒன்று சென்றாலும்
ஆறவில்லை எங்கள் மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது உங்கள் நினைவு
கண்மூடித்தூங்கும்போதுங்கூட
எங்கள் மனக்கண்களில்
உங்கள் பாசநினைவுகள்
நிழற்படமாய்
நீண்டோடுகின்றதே
இனிய தாயாய் எம்முடன்
இல்லத்திலும்
இதயத்திலும்
வாழ்ந்தீர்கள் அம்மா
கனிகள் தரும் பழத்தோட்டமாய்- உன்
தேவை வேண்டி வந்தோர்க்கெல்லாம்
சேவை செய்தீர்கள் தாயே!
பதுவாலயாவின் ராஜகுமாரியே!
உன் ஆத்ம இளைப்பாற்றிக்காய்
ஆண்டவனை பிரார்த்திக்கும்
அன்பான
பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்
மருமக்கள்
கூடப்பிறந்தோர் மற்றும்
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
பருத்தித்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
Toronto, Canada வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )
