Clicky

பிறப்பு 16 NOV 1938
இறப்பு 15 JAN 2021
அமரர் திரேசம்மா அந்தோனிப்பிள்ளை
வயது 82
அமரர் திரேசம்மா அந்தோனிப்பிள்ளை 1938 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
16 NOV 1938 - 15 JAN 2021
Late Thiresamma Anthonypillai
எண்ண முடியவில்லை நீங்கள் இறதி யாத்திரைக்கு போனதை.... எண்ணாமல் இருக்க முடியவில்லை நீங்கள் இருந்த இடம் இடைவெளியானதை பார்க்கையில் முத்து ராசாவின் ராசாத்தி நீங்கள் முதல்வனின் முகவரி தேடி போனதால்.. முட்டிய கண்ணீர் விழிகளை மூட முடியாமல் முடங்கிப்போய் கிடக்கின்றோம் செக்கலது தன் முகப்பை இழந்து வக்கத்தப்போய் வடிவிழந்து நிற்கின்றது கருமேகக்காட்டிற்குள் காணாமல் போன கதிரோன் அழுத செம்முகத்துடன அடிவானில் அமிழ்ந்து போனது ஒற்றை மெழுகுதிரி தன் இயலாமையிலும் பற்றி எரிந்து விட்டு பட்டுப்போனது கனவுகளுக்கு கூட கால அவகாசம் தேவைப்படுகின்றது ஆனாலும் தாயே நீங்கள் எங்களை கடந்து சென்றதை எந்த கணக்கில் சேர்ப்பது என் தந்தை வழி மாமியை இளம்வயதில் தொலைத்தவன் நான்... இன்றுவரை நீங்கள் தானே என் மாமியாக இருந்தீர்கள் ஏன் இடைநடுவில் போனீர்கள் நெஞ்சம் கனக்கின்றது தாயே... அன்று என் அன்னை அருகமர்ந்து ஆண்டவர் துதி உங்கள் குரல்வழி வந்தபோது கூடியிருந்த நாங்கள் குதூகலித்துப்போனோமே.... எப்படி மறப்பது.... கடிந்ததில்லை கனமான வார்த்தைகள் இதுநாள் வரை நான் உங்களிடம் கேட்டதில்லை எங்கள் சுகத்தை விசாரிக்கையில் உங்கள் முகப்பூரிப்பு அந்தோனியார் ஆலய முகப்பைபோல் மாறுமே... எப்படி மறப்பது. மாதாவே ... நற்கருணை நாதரின் மாசற்ற மரியே.. உன் மலரடி நாடிவந்த எங்கள் மங்கா விளக்கை அணையாமல் பிரகாசிக்க வையும். நாங்கள் உம் இடம் வரும்வரை அவரின் அன்பை இவ்வுலகத்திற்கு அளித்தருளும். மருமகன் தேவன்
Write Tribute

Tributes