தமிழீழம் யாழ். நவாலி தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தில்லையம்பலம் அன்னபூரணம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாய்மொழி அறிந்தவர்கள்
தடுமாறுவதில்லை
தாயில் பாசம் உணர்ந்தவர்கள்
தடம் மாறுவதில்லை
தாயின் மடியை காட்டிலும்
ஒரு சிறந்த தலையனை
இந்த உலகில் வேறு எதுவும் இல்லை
சாய்ந்து பாருங்கள் அதன் சுகம் தெரியும்
கருவறையில் இருந்த உணர்வை
உங்கள் மடியில் உணர்கிறேன் அம்மா
பிள்ளைகளின் இதயகூட்டில்
உண்மையான ராணி அம்மா நீங்கள் மட்டும் தான்
உருவம் அறியாமல் கருவிலும்
என்னை காதல் செய்தவளே
என் முகம் பார்க்கும் முன்னே
என் குரல் கேட்கும் முன்னே
என் குணம் அறியும் முன்னே
என்னை காதல் செய்தவள் என் அம்மா
அம்மா இல்லாத வெற்றிடத்தை
நிரப்ப முடியாவிட்டாலும்
அம்மாவின் அன்பும் ஆசீர்வாதமும்
எங்களை தொடர்ந்து காக்கின்றது
ஆண்டுகள் ஆறு ஆயினும்
அம்மாவின் குரல் உங்கள் நினைவுகள்
எம் மனதை விட்டு பிரியவில்லை
அம்மா இல்லாத உலகம்
அஸ்தமனம் ஆனது இன்று!!
ஆருயிர் நண்பி, மாமிக்கு ஆத்ம சாந்திகள்் அன்புடன் மருமகள் பவானி சிறிக்குமார்