

யாழ். நவாலி தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தில்லையம்பலம் அன்னபூரணம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா ஒரு சகாப்தம்
அரவணைத்த அம்மா எங்கே
ஆசை முத்தமிட்ட கன்னமெங்கே!
கட்டி தழுவிய கரங்கள் எங்கே
இன்று நீங்கள் எங்கே!
அம்மா சுகமான சுமையாக எங்களை!
உங்கள் வயிற்றில் சுமந்தீர்கள்
எங்கே சென்றீர்கள் எங்களை
தனியா தவிக்க விட்டு தாயே!
கருவான முதல் கண்ணினுள் வைத்து காத்தீர்கள்
எம் கருணையின்
உருவான தாயே எங்களை
ஈன்றெடுத்த எம் தெய்வமே!
எங்களை தவிக்க விட்டு எங்கு சென்றீர்கள் தவக்கொடியே!
எங்களை படைத்த தாயே கண் கலங்கி
நிற்கின்றோம்.
உங்கள் உதிரத்தை தாய்ப் பாலாக ஊட்டினீர்கள்!
இன்னும் சிலகாலம் இருப்பீர்கள் என்று கனவு கண்டோம்.
காலனுக்கு பொறுக்கவில்லையேனும்
தாயிழந்த சேய் வாழ்க்கை!
வளமிளந்த நிலமாகி விட்டது.
உதிரத்தில் அன்பினை சுமந்து உங்கள்!
உயிரினில் எங்களைக் கலந்துள்ளீர்கள்!
ஈரேழு ஜென்மம் பிறந்தாலும் உங்களினதும்,
அப்பாவினதும் பிள்ளைகளாகப் பிறக்க வேண்டும் அம்மா.
அகிலத்தின் பொக்கிசம் ஒரு தாய்
அந்த தாய்களுக்குள் நீங்கள் எங்களுக்கொரு
பொக்கிசம்! எங்களுக்கொரு சகாப்தம்!
இது ஒரு கற்பனையல்ல நீங்கள் தந்த
உதிரத்திலிருந்து உதித்த
உண்மை
என்றும் உங்களை மறவா
உங்கள் அன்பு பிள்ளைகள்....
ஆருயிர் நண்பி, மாமிக்கு ஆத்ம சாந்திகள்் அன்புடன் மருமகள் பவானி சிறிக்குமார்