

யாழ். நவாலி தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தில்லையம்பலம் அன்னபூரணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓர் உருவில் கட்டி வைத்தீர்கள் பேரன்பால்
மடி சுமந்த ஏழுருவும் உருகி நிற்க
முன்னூறு நாள் சுமந்த அன்னையுங்கள்
முதலாண்டு திதி வந்ததோ!
கனவாய் கலைந்து போனதே...
நடை பயின்ற முற்றமெல்லாம்
சுற்றிவர உறவிருந்தும், ஊர் முழுதும்
நீங்கள் விதைத்த புண்ணியங்கள்
எமக்கானதே
அன்னை என்ற அன்பிற்கு ஏழைகள் நாங்கள்
திசை தோறும் பிரிந்த பின்னும்
நாம் கூடும் தாய்மடியே!
நீங்கள் இன்றி வெறுமையாய்ப்போனதம்மா
இனி.....
ஊர் திரும்பும் போதெல்லாம்
சாமி இல்லாத் தேரென
மாலை சூடான மணப்பெண்ணாக எம்முற்றம்.
அம்மா என்று நாமழைக்க
கனவிற்கூட கண் கலங்குதே
மூச்சைவிட்டு அன்னை தந்த மூச்சிது
தன் ஆயுள் முடித்து அம்மா தந்த உயிரிது
ஆயுளுக்கும் நீங்களே எங்கள் மூச்சு.
ஆருயிர் நண்பி, மாமிக்கு ஆத்ம சாந்திகள்் அன்புடன் மருமகள் பவானி சிறிக்குமார்