2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தில்லையம்பலம் அன்னபூரணம்
(பேபி)
வயது 84

அமரர் தில்லையம்பலம் அன்னபூரணம்
1935 -
2019
நவாலி தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி: 30-12-2021
யாழ். நவாலி தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தில்லையம்பலம் அன்னபூரணம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பால் எமை ஆண்ட அன்னையே
அன்றொரு நாள் ஒரு வார்த்தை சொல்லாமல்
எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆனதா...
இன்னும் ஆறவில்லை எம் துயரம் தாயே…
துன்பம் ஏதும் இல்லாமல் கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உங்கள் மலர்ந்த முகத்துடன் எங்களை உங்கள்
கண் இமைக்குள் வைத்து நாம் வாழ
வழி அமைத்துக் கொடுத்தீர்கள் அம்மா!
அன்பைச் சுமந்து அறிவைச் சுமந்து
நல்ல பண்பைச் சுமந்து
ஈடில்லாப் பாசம் சுமந்து
நீங்கள் எமக்களித்த இன்பமெல்லாம்
நினைத்து முடிக்குமுன்பே
நிர்மூலமானதென்ன?
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட எம் அன்புத் தாயே
உங்கள் ஆத்மா சாந்தி அடைய தினமும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
ஆருயிர் நண்பி, மாமிக்கு ஆத்ம சாந்திகள்் அன்புடன் மருமகள் பவானி சிறிக்குமார்