யாழ். பரந்தனைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் யோகராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று போனாலும் எங்கு சென்றாய்
என் செல்வமே என் மகனே
எத்தனை ஆண்டு போனாலும்
பத்துமாதம் சுமந்து பிள்ளையாய்
ஆசையோடு ஈன்று எடுத்த என் செல்வமே
உன் முகம் காணமல் தவியாய் தவிக்கும்
உன் பாசமிகு அம்மா
காலம் எல்லாம் என்னை
வாழவைத்த கணவாளனே
காலன் அவன் பார்வையில் என்னை
தவிக்க விட்டு சென்றதேனோ?
எமக்கு உயிர் தந்த அப்பாவே
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்
ஆண்டு ஒன்று ஆனாலும்
ஆசை அப்பாவே உம் நினைவுகள் எம்மோடு
நித்தமும் பாசமாய் எம் இதயத்தில்
வாசமாய் ஆனவரே அப்பாவே!
என்னருமைச் சகோதரனே!
அனைத்தும் உனதருகில் இருந்தும்
முடியாமல் போனது எப்படி!
விதியா? இறைவனின் சதியா?
கண்மூடி தலையணையில்
சரியாக தூங்கவில்லை இன்றுவரை
குற்றவுணர்ச்சியில் குறுகித்தான் போகின்றேன்!
உங்கள் பிரிவால் வாடும் அம்மா, மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள் மற்றும் குடும்பத்தினர்
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட தர்மலிங்கம் யோகராசா அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
I have heard so many stories about you and I know what an amazing person you about you is so unique and I wish I had the opportunity to meet you. I know you were loved by a lot of people,...