அம்மா என்ற உறவு அற்புதமானது அன்புடன் தான் வளர்த்து அறிவையும் பண்பையும் நிறைத்து வளமான வாழ்க்கையை வளமார உளமார வாழ்ந்திட வாழ வைத்த அன்புத் தெய்வமே அம்மா பூ உலகிலிருந்து விடை பெற்று விண்ணுலகம் விரைந்தீர்களோ.! எங்கள் மனமெல்லாம் தங்களின் தங்கமான நல்வாசம் வீசிட விரைந்த உங்கள் ஆத்மா நன்னிலை எல்லாம் பெற்று அம்மன் திருவருளால் திருவடி அடைய சிந்தையால் சிரம் தாழ்த்தி வேண்டுகிறோம்.! மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே? கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர் துளிகளைக் காணிக்கையாக்குகிறோம். காணாத கண்ணிற்கு கரைந்து போன கற்பூரமே வாழ்நாளில் மறவாது வடிக்கிறேன் கண்ணீர். ஓம் சாந்தி!! சாந்தி!! சாந்தி!!