Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 28 JUL 1927
ஆண்டவன் அடியில் 16 SEP 2021
அமரர் இளையதம்பி தனலட்சுமி அம்மா (பாக்கியம்)
வயது 94
அமரர் இளையதம்பி தனலட்சுமி அம்மா 1927 - 2021 புத்தூர், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

பூர்வபட்ச - ஏகாதசி : 06-09-2022

யாழ். புத்துரைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி, டென்மார்க் Herning, பிரித்தானியா Sutton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி தனலட்சுமி அம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் முகவரியே அம்மா
மனிதருள் மாணிக்கமே
மாசில்லாத் தங்கமே
தியாகத்தின் உருவமே
மகத்தான தாயே

வருடமொன்று சென்றதம்மா
உன்குரல் கேளாது அன்பு
காட்டி எமை அரவனைத்து
புன்னகைத்த வண்ணம் உறவுகளோடு
 உறவாடி நீ நின்றாய்
தரணியிலே நாங்கள் தலை நிமிர்ந்து
நிற்பதற்கு உன்னை உருக்கி எமை
 வளர்த்தெடுத்தாய் தாயே..!

நீ அணைந்து போனதால் நம்
இல்லம் இருளாகி போனதம்மா
உனை இழந்து நாமெல்லாம்
உருகுந்து போகிறோமே
வலியோடு தவிக்கிறோம்
உன் நினைவோடு எந்நாளும்
எத்தனை பிறப்பிலும் உங்களுக்கு
 பிள்ளைகளாய் பிறந்திட
இறைவனை வேண்டி - உம்
ஆத்மா சாந்தியடைய வணங்குகிறோம்

 நன்றி தாயுனக்கு..
 சாந்தி...சாந்தி...சாந்தி...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos