9ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் ஸ்ரீதவராஜா குருசாந்த்
1988 -
2016
வட்டுக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீதவராஜா குருசாந்த் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ எம்மை பிரிந்து 9 ஆண்டுகள்
ஆகிய போதும்
எம் இதயத்தை விட்டு விலகாமல்
என்றும் எம்மோடு நீ இருப்பாய்!
அன்பின் திருவுருவே மகனே
அலையும் அடித்து ஓய்ந்தது
காற்றும் வீச மறந்தது
கடவுளும் கல்லாய் போனானே
எம் செல்லம் கால் பதித்த போது
காத்திருந்து காலனவன் சதி செய்தானே?
அன்பு என்னும் பறவை
சிறகடித்து வானில் பறந்தது!
விதி என்னும் அம்பினால்
அது அடிபட்டு மாய்ந்தது!
வாழ்ந்த கதை முடியமுன்
இறந்திடவா நீ பிறந்தாய்!
நீ ஆண்ட கதை அழிவதில்லை
நீ எங்கே சென்றாய் தனியே!
நொடிப்பொழுதில்
எம்மை தவிக்கவிட்டு எங்குதான்
முகவரி இல்லாத இடத்திற்கு
தன்னந் தனியே சென்றாயோ!
உன் பிரிவை நினைத்து எங்கள்
கண்ணீரால் கவலையை ஆற்றுகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
RIP