யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீதவராஜா குருசாந்த் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ எம்மை பிரிந்து ஆண்டுகள் மூன்று
ஆகிய போதும் எம் இதயத்தை விட்டு விலகாமல்
என்றும் எம்மோடு நீ இருப்பாய்!!
எம் குடும்பத்தின் ஆணி வேர் உன் தந்தை
அந்த ஆணி வேரை இழந்து
ஆணி வேர் இல்லா விருட்சமாக
இருந்த எமக்கு நீ தந்த அன்பு
நான் இருக்கிறேன்
என்ற நம்பிக்கையை தந்தது
தாய்க்கு நல்ல மகனாக
தம்பிக்கும் தங்கைக்கும் தந்தையாகவே மாறி
தந்தை இருந்து செய்வது போல்
எல்லாவற்றையும் செய்தாய்!!
ஈழத்து திரையுலகில் சாதனை படைக்க வேண்டும்
என்பதே உன் ஆசை அந்த ஆசை நிறைவேறுவதற்குள்ளே
உன்னை எம்மிடம் இருந்து பிரித்த அந்த காலன் எனும் கயவன்
எம்மை மறுபடியும் ஆணி வேர் இல்லா விருட்சமாக்கிவிட்டான்
நீ பிரிந்தது எங்கள் கண்களை விட்டுத்தான்
இதயத்தை விட்டு அல்ல...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!
குருசாந்த்துடன் கடலில் மூழ்கி பலியான நிதர்சன், கோபிகாந்தன், கேனுகன், இந்துசன் ஆகியோரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
RIP