

-
26 AUG 1988 - 24 AUG 2016 (27 வயது)
-
பிறந்த இடம் : வட்டுக்கோட்டை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீதவராஜா குருசாந்த் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எழுதிட வார்த்தை இல்லை
அழுதழுது ஓய்ந்தன கண்கள்!
ஆண்டுகள் எட்டு ஆனதடா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உன் போல் ஆகிடுமா!
வாழ்ந்த கதை முடியுமுன்
சென்றிடவா நீ பிறந்தாய்
உன் வாழ்வு தொடங்கும் முன்
நீ எங்கே சென்றாய் தனியா!
எத்தனை கனவுகள் கண்டிருப்போம்
அத்தனையும் புதைத்து போனதய்யா
உந்தன் அழகான
புன்னகை முகத்தை தொலைத்து விட்டு
அமைதியற்று வாழ்கிறோம்!
காலங்கள் எத்தனை கடந்து போனாலும்
உன் பிரிவிலிருந்து மீண்டு வருவதற்கு
இந்த ஜென்மமல்ல எந்த ஜென்மமும்
போதாதய்யா !!
இருதயமே உன் நினைவில்
இருண்ட யுகத்தில் நாமையா!
நிழல் போல் இருந்தவன் நீ!
நினைவாய் மாறினாய்
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர்த் துளியானாய்!!
எம் இதயங்களெல்லாம் நொருங்க
இமைகளெல்லாம் நனைய
எங்களைத் தவிக்கவிட்டு
நெடுந்தூரம் சென்றதேனோ?
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வட்டுக்கோட்டை, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

RIP