யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீதவராஜா குருசாந்த் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ எம்மை பிரிந்து ஆண்டுகள்
ஆறு ஆகிய போதும்
எம் இதயத்தை விட்டு விலகாமல்
என்றும் எம்மோடு நீ இருப்பாய்!
எம் குடும்பத்தின் ஆணி வேர்
உன் தந்தை
அந்த ஆணி
வேரை இழந்து ஆணி வேர் இல்லா
விருட்சமாக
இருந்த எமக்கு
நீ தந்த அன்பு
நான் இருக்கிறேன்
என்ற நம்பிக்கையை தந்தது
தாய்க்கு நல்ல மகனாக
தம்பிக்கும் தங்கைக்கும்
தந்தையாகவே மாறி
தந்தை இருந்து செய்வது போல்
எல்லாவற்றையும் செய்தாய்!
என் செய்வேன் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை
போன திசை
எது என்று தெரியாது?
மொட்டாகி பூவாகி காயாகி
கனியாகும்
வேளையில் காத்திருந்து
படைத்தவன்
பழி தீர்த்தானோ?
உடல் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எம் உயிரே!
உந்தன் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
RIP