Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 09 JUL 1959
இறப்பு 26 OCT 2022
அமரர் சிறி ஆனந்தராசா கோவிந்தபிள்ளை
வயது 63
அமரர் சிறி ஆனந்தராசா கோவிந்தபிள்ளை 1959 - 2022 வட்டக்கச்சி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen Wittenbach ஐ வதிவிடமாகவும் கொண்ட சிறி ஆனந்தராசா கோவிந்தபிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

கரம்பிடித்தவளோடு வாழ்வில் பாதியாய்
பக்கபலமாய் இருந்து என்னை பாதியிலே
பரிதவிக்கவிட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன?
என் வாழ்நாள் முழுவதும்
கூடவே இருப்பேன் என்று கூறியது பொய்யாகிப்போனதே
தவிக்க விட்டு சென்று விட்டீரே
என் அன்புக் கணவரே
மறந்து விட்டேன் இனி
என் வாழ்வை என் மனதை உடைத்து
மரணத்தால் வென்று விட்டீர்கள்
உங்கள் நினைவுகள் மட்டும் மிஞ்சியுள்ளது

அன்பான அப்பா உங்கள் முகம்
காண ஏங்கி தவிக்கின்றோம்
கண் இமைக்கும் நேரத்தில்
எங்கள் இதயங்கள் நொறுங்க
 எங்கே சென்றீர்கள் அப்பா
இரவு பகல் பாராது எமை கண்ணை
இமை காப்பது போல் காத்து
எமை ஆழ் ஆக்கிய எமது
பொக்கிஷம் நாம் உமை இருத்தி வைத்து
அழகு பார்க்க நினைத்து தவறா?
அந்த காலனுக்கு பொறுக்கவில்லை
எங்கள் செயல்கள் ஒவ்வொன்றிலும்
இருந்து வழிகாட்டும் துணையாக
நீங்கள் தான் இருக்க வேண்டும் அப்பா
 என்றும் எமது வலக்கரம் பிடித்து
வழிகாட்டும் தெய்வம் நீங்கள் தான் அப்பா
ஒரு மாதம் கடந்தது எமக்கு ஒரு
 நொடி போல் உள்ளது அப்பா...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 உங்கள் நினைவுகளோடு
மனைவி, பிள்ளைகள்

எங்கள் குடும்பத்தலைவன் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி ஊடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்தோடு இவ் அழைப்பிதழை ஒவ்வொருவரும் தமக்கென தனியழைப்பாய் ஏற்று எதிர்வரும் 26.11.2022 சனிக்கிழமை அன்று முற்பகல் 11.30 மணியளவில் நடைபெறும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் கலந்துகொண்டு அன்னாரின் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திப்பதோடு தொடர்ந்து நடைபெறும் மதியம் போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்கள் அனைவரையும் தாழ்மையுடன் அழைக்கின்றோம்.

பிரார்த்தனை நடைபெறும் இடம் :

Kapelle Sant'Antonio,
Heimatstrasse 13,
9008 St. Gallen,
Switzerland

இங்ஙனம், மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

நதீஸ் - மகன்
குணம் - சகோதரன்
ராசா - மைத்துனர்
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்