Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 JUL 1959
இறப்பு 26 OCT 2022
அமரர் சிறி ஆனந்தராசா கோவிந்தபிள்ளை
வயது 63
அமரர் சிறி ஆனந்தராசா கோவிந்தபிள்ளை 1959 - 2022 வட்டக்கச்சி, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திதி:02/11/2024

கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen Wittenbach ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிறி ஆனந்தராசா கோவிந்தபிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

வாழ்க்கை என்பது இறைவன் அவன் வகுத்தவரை தானே ஆண்டு இரண்டு ஆனது ஆனால் ஒவ்வொரு நொடியும் உம்மை நினைப்பதால் இரண்டு ஆண்டு என்று தெரியவில்லை உண்ணும் உணவிலும் உடுத்தும் உடையிலும் உங்கள் வாசத்தையும், நீங்கள் என்மேல் வைத்த பாசத்தையும், மறக்கமுடியாத உங்கள் முகம், மறக்கமுடியாத உங்கள் குரல், மறக்கமுடியாத நம் வாழ்க்கை, மறக்கமுடியாத ஒரு பிரிவு, மறக்கமுடியாத ஒரு வலி, மறக்கமுடியாத ஒரு நினைவு மறைக்கப்பட்டது. எனக்குள் அளவு கடந்த பாசத்தை வைத்துவிட்டேன் அதனால் உங்களை அதிகம் தேடுகிறது, வானத்தை விட்டு நிலவையும் வாசத்தை விட்டு மலரையும் பிரிக்கமுடியாது அதுபோல் உங்கள் நினைவுகள் எங்கள் நெஞ்சில் துடிப்பு இருக்கும் வரை உங்கள் நினைவுகளை சுமந்து வாழ்வோம்..!

அன்பு அப்பாவே நேற்று போல் எம் நெஞ்சோடு நினைவிருக்க ஆண்டு இரண்டு ஆனது அப்பா எந்த எதிர்பார்ப்புமில்லாமல் எமையே இயந்திரம் போல் போல் சுற்றி சுற்றி வந்தீர்கள். இயந்திரம் போல் இயங்கிய அப்பாவை நாம் இருக்க வைத்து பார்க்க கொடுத்து வைக்கவில்லை..! அன்பை தந்து அறிவை தந்து எம்மை ஆளாக்கி வைத்து எமை தவிக்கவிட்டு பிரிந்து சென்றதேனோ..!

உங்கள் நினைவு எமக்குள் இருக்கும் வரை எம்மோடு எம் இதயங்களில் இருப்பீர்கள்..! வானில் இருக்கும் விண்மீனாய் இருந்து எமக்கு வழிதுணையாக எம்மோடு இருந்து எம்மை வழி நடத்துங்கள் அப்பா. உங்களை போன்றதொரு அன்பான உறவை இழந்து தவிக்கும் கலையாத நினைவுகளுடன் உங்கள் கண்ணீர் பூக்களால். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்..! ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி..!

House Address:
 Switzerland.
தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos