கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen Wittenbach ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிறி ஆனந்தராசா கோவிந்தபிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான கணவரே, ஆசையப்பாவே
உங்களை இனி பார்க்க முடியாது
எங்களால் உங்களை தொடமுடியாது
நீங்கள் செல்வதை
கேட்கமுடியாது
எம்மால் உங்களை பார்க்கமுடியாது
ஆனால்
நீங்கள் எப்போதும்
எம்முடன் இருப்பதை எம்மால் உணரமுடிகிறது
ஏனென்றால் நீங்கள் எம் இதயத்தில் இருக்கிறீர்கள்
என் அன்பே
ஒரு நாள் மீண்டும் சந்திப்போம்
உங்களை இழந்தன் வலியை
வார்த்தைகளால் சொல்லமுடியாது
வானத்தில் பிரகாசிக்கும்
மிகப்பெரிய நட்சத்திரம்
நீங்களாகத்தான் இருப்பீர்கள்
என்பது
எமக்கு தெரியும்,
நீங்கள் விண்ணுலகில்
நன்றாக வாழ்ந்து
கொண்டு இருப்பீர்கள்
என நம்புகிறேன்
மறக்க முடியாத
உறவும் நீங்கள் தான்
வெறுக்க முடியாத உறவும் நீங்கள்
தான்
நீங்கள் இருப்பதோ தொலைதூரத்தில்
உங்கள்
நினைவுகள் இருப்பதோ
என் விழியோரத்தில் கண்ணீராக!
இருந்தும் மறக்க முடியாத ஒருமுகம்
மறக்கமுடியாத எமது பயணம்
மறக்க முடியாத ஒரு பிரிவு
மறக்கமுடியாத ஒரு வலி
மறக்க முடியாத ஒரு நினைவு
மறைக்கப்பட்டது என்னுள்
உலகில் எங்கு சென்றாலும் உங்களை போல்
ஒரு அன்பான வரை
காண முடியாது
இன்று நடந்தது போல் உள்ளது
இருந்தும் மூன்று வருடங்கள் ஆகிவிட்டது
இருந்தும்
உங்கள் நினைவுகளோடு
இருக்கும் வரைவாழ்வோம்.
அன்னாரின் ஆத்ம சாந்தி பூஜை 22-10-2025 புதன்கிழமை அன்று எமது இல்லத்தில் நடைபெறும், இந்நிகழ்விலும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.