Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 JUL 1959
இறப்பு 26 OCT 2022
அமரர் சிறி ஆனந்தராசா கோவிந்தபிள்ளை
வயது 63
அமரர் சிறி ஆனந்தராசா கோவிந்தபிள்ளை 1959 - 2022 வட்டக்கச்சி, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen Wittenbach ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிறி ஆனந்தராசா கோவிந்தபிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் அனையாத தீபமே அப்பா ஆலமரத்தில் அழகாய் கூடுகட்டி பிரகாசம் என்ற ஒளி ஏற்றி குடும்பத்தின் தலைவானாக எமை வழிநடத்தி எம் இதயத்திற்க்கும் நிரந்தர வலியை தந்து ஓர் ஆண்டு ஆகின்றது ஆனால் எமக்கு நாட்கள் போல் தெரிகிறது. உங்கள் உடல் தான் எம்மோடு இல்லை உங்கள் ஆத்மா எந்த நாளும் ஓவ்வொரு அசைவிலும் எமது நெஞ்சங்களில் தான் வாழ்கின்றீர்கள், காலன் தான் உங்களை எங்கள் காவல் தெய்வம் ஆக்கி விட்டானோ உங்களை இழந்துவிட்டோம் என்று நினைக்க எங்கள் மனம் ஏற்க மறுக்குதப்பா. ஆறுதல் சொல்ல ஆண்டவனே வந்தாலும் அப்பா உம் ஆருயீர் அன்புக்கு ஈடாகுமா? சோகத்தை மறந்து கூட வாழ்ந்து விடலாம். உங்களோடு வாழ்ந்த அந்த நினைவுகளை மறந்து நிச்சயமாக வாழமுடியவில்லை. உங்கள் அன்பின் பிரிவில் நீங்கள் தந்த வலிகள் கண்ணீர் தனிமை தவித்த நாட்கள் எங்களிடம் இருந்து பிரித்த கடவுள் உங்கள் நினைவுகளை எங்களிடம் இருந்து பிரிக்க மறந்து விட்டார் போல நீங்கள் வாகன விபத்தில் கஸ்ரப்பட்டபோது வலி துன்பம் முட்டி மோதி எல்லாவற்றையும் கடந்து வந்து வீட்டில் எம்மோடு இருந்தால் காணும் என்று நினைக்கும் போது தான் அடுத்த கனமே திரும்பிபார்த்தால் எமன் எருமையில் நம்மளவிட வேகமாக வருவான், உங்களை அழைக்க வென்று நினைத்துக்கூட பார்க்கவில்லை, இது தான் மனிதவாழ்க்கை என்று புரிய வைத்தீர்கள். என் செய்வது எம்மருகில் நீங்கள் இருந்தால் வானத்தையே வில்லாக வழைக்கும் தையிரியம் அப்பா அப்பா தான்...

எமது குடும்பத்தலைவரின் 1ம் ஆண்டு நினைவுநாள் 13-11-2023 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும், ஆத்மசாந்தி பூஜையில் கலந்து மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம் ஒவ்வொருவரும் இதை தனிப்பட்ட அழைப்பாக எற்று எமது இல்லத்திற்க்கு வருகை தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
Srianandarajah Kovinthapillai
Vordere Bettenwiesenstrasse 23
9300 Wittenbach (SG) 
Switzerland

தகவல்: மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

சகுந்தலா - மனைவி
நதீஸ் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos