கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen Wittenbach ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிறி ஆனந்தராசா கோவிந்தபிள்ளை அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
வன்னிமண் பெற்றறெடுத்த தவப்புதல்வா
காலம் கடந்ததென்று நினைத்திருக்க
காலன் கவர்ந்த விதம் நாமறியோம்
வீறுகொண்ட உன்நடையும், விறுப்பான உன்
வார்த்தைகளும், மெலிதான புன்னகையும்
உனை விட்டுப்போனதுவோ
நண்பர்கள் கூடி நலம் கேட்டு நிற்கையிலே
நான் போய் வாறேன் என்று ஏன்தான் சொன்னாயோ!
எட்டுத்திசையெங்கும் ஏந்தி நிற்கும் உன்நாமம்
நாமத்தை மறந்து நல்லிணக்கம் ஏன் செய்தாய்?
காலங்கள் காத்திருக்க காலனவன் உன்நாமம் ஏன் எடுத்தான்?
உள்ளத்தால் நல்ல உள்ளம் ஏன்தான் உறங்கியதோ!
மனையாள் பார்த்திருக்க மணிமகுடம் சூடிப்போய்வாறேன்
என்று சொல்ல மனம்தான் வந்ததுவோ
பெற்றெடுத்த பிள்ளைகள் ஏங்கிநின்று தவிக்கையிலே
போன இடம் கூறாமல் எங்குதான் போனாயோ
உன் அண்ணர் அருகிலிருந்து பார்த்திருக்க
ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு எங்கு சென்றாய்?
சிறி என்று சொல்லி செங்காளனில் நாம் கதைக்க
ஆனந்த சொரூபமாய் எங்குதான் சென்றாய்
அம்பிகையை வேண்டுகின்றோம் உங்கள் ஆத்மா
சாந்தியடைய ஆனந்தராசாவே!
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அம்பாளை வேண்டுவதோடு அவர்தம் மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார் உறவினர்கள் ஆகியோருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.