Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 JUL 1929
இறப்பு 09 JUL 2019
அமரர் சிவபாக்கியம் நல்லையா
வயது 89
அமரர் சிவபாக்கியம் நல்லையா 1929 - 2019 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.


யாழ். வல்வெட்டி வேவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் நல்லையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனதம்மா- ஆனாலும்
ஆறவில்லை எம் மனது
அரவணைத்த கை நழுவியதோ
அன்னமிட்ட கை எம்மை மறந்ததோ
ஓயாமல் அழைக்கும் உங்கள் குரல் ஒலி எங்கே?
கட்டளை இடும் கணீர் ஒலி தான் எங்கே? 
கேட்காமல் தவிக்கின்றோம்..
வயதாகிய பிள்ளைகள் நாங்கள்- ஆனாலும்
வாய்மொழி ஆறுதலும் மனமொழித் தைரியமும்
நீங்களாய் தான் இருந்தீர்கள் அம்மா
பொத்தி வளர்த்த பேரப்பிள்ளைகளின்
பெருமை பேசும் அம்மம்மா எங்கே?
அன்பு பொங்க அரவணைத்து கண்கலங்கி
வழி அனுப்பும் விழி தான் எங்கே??
தேடுகின்றோம் இந்த  பாரினலே
காணவில்லையே எம் கண்களிலே- அம்மா
எத்தனை பிறப்பு எடுத்தாலும் அது
உங்கள் மடியாக இருக்க வரம் வேண்டி நிற்கின்றோம்!!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! 

என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மருமக்கள்...

தகவல்: குடும்பத்தினர்