2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவபாக்கியம் நல்லையா
வயது 89
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 18-06-2021
யாழ். வல்வெட்டி வேவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் நல்லையா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு, அக்கறை, அரவணைப்பு,
பக்தி, பாசம், பொறுமை,
பொறுப்பு, நேசம், தியாகம், கடமை
என எல்லா உணர்வுகளையும்
உங்களிடம் கண்டோம்!
அம்மா என்ற சொல்லுக்கு
அர்த்தம் சொல்ல மொழிகள் போதாது
ஆண்டுகள் இரண்டு ஓடி மறைந்தன
எமை அரவணைத்த அம்மா எங்கே
ஆசை முத்தமிட்ட கன்னமெங்கே?
கட்டித்தழுவிய கரங்கள் எங்கே
இன்று நீ எங்கே அம்மா!
அன்பின் அர்த்தம் புரியவில்லை
அன்று உம்மை இழக்கும்வரை
இன்று இரண்டு ஆண்டுகள் ஆனாலும்
எம் உள்ளத்தின் உயிர் முச்சில்
வாழ்கின்றீர்கள் நாங்கள் இறக்கும்வரை
நினைவில் எம்முடனும் நிஜத்தில்
இறைவனிடமும் கலந்திட்ட உன் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
வீட்டு முகவரி:
EG 2, De Mel flats,
Grandpass Road,
Colombo-14.
Grandpass Road,
Colombo-14.
தகவல்:
குடும்பத்தினர்