Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 25 SEP 1934
விண்ணில் 23 AUG 2019
அமரர் சின்னத்துரை மயில்வாகனம்
முன்னாள் உரிமையாளர்- மயில்வாகனம் ஸ்ரோர்ஸ், நந்தாவில் அம்மன் கோவில் வீதி, கொக்குவில் கிழக்கு, குமரகோட்டம் சித்தி வைரவர் முத்துமாரி அம்மன் ஆலய தலைவரும், குமரகோட்டம் சனசமூக நிலைய தலைவரும் ஆவார்
வயது 84
அமரர் சின்னத்துரை மயில்வாகனம் 1934 - 2019 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 26-08-2024

யாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை மயில்வாகனம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

உங்கள் நினைவலைகள் ஓயாது வந்து
 எம் மனக்கரையை தழுவும் போதெல்லாம்
 விழி நனைந்து தவிக்கின்றோம்
மீளாத்துயிலில் நீங்களும்
 ஆறாத்துயரில் நாமும் வாழ
 படைத்தவன் எழுதிய கணக்கு!

நீர் மறைந்துபோன நாளன்று
 உறைந்துதான் போனோம்
 இன்னும் உடைந்து தான் போகின்றோம்

அப்பா நீங்கள் இறையடி எய்து
 ஐந்தாண்டு நம்ப மனம் மறுக்கிறது
 இதயமெல்லாம் வலிக்கிறது
 வேரற்ற மரமாய் வேதனையில்
 துடிக்கிறோம் ஏன் மறைந்தாய்?

காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும்
 கடந்து வந்த பாதையிலே
 நினைவலைகள் தொடரட்டும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 24 Aug, 2019
நன்றி நவிலல் Sun, 22 Sep, 2019
நினைவஞ்சலி Mon, 07 Sep, 2020