நினைவஞ்சலி

அமரர் சின்னத்துரை மயில்வாகனம்
முன்னாள் உரிமையாளர்- மயில்வாகனம் ஸ்ரோர்ஸ், நந்தாவில் அம்மன் கோவில் வீதி, கொக்குவில் கிழக்கு, குமரகோட்டம் சித்தி வைரவர் முத்துமாரி அம்மன் ஆலய தலைவரும், குமரகோட்டம் சனசமூக நிலைய தலைவரும் ஆவார்
வயது 84

அமரர் சின்னத்துரை மயில்வாகனம்
1934 -
2019
கோண்டாவில், Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை மயில்வாகனம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் அடையாளச் சின்னம்
அரவணைப்பின் அழகு நிறை உதாரணம்
அணுவளவும் கலப்படமில்லா ஆழ்ந்த அன்பு....... !!
சிந்தை எல்லாம் நிறைந்த
சீலத் திருவுருவே- தந்தையே
இப்பூலோக வாழ்வுதனை நீத்து
ஆண்டு ஒன்று கடந்ததுவோ?
துன்பம் இன்றி கஷ்டங்கள் இன்றி
எங்களை காத்தீரே எம் தந்தையே!
எம்மை விட்டு பிரிந்ததேனோ?
உங்கள் பிரிவுத் துயரையாரிடம் பகிர்வோம்?
உங்களுக்காய் பாதபூசை செய்து
கண்ணீரால் நனைகின்றோம்
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வழப்படுத்துவீரே ஐயா!
நொடிக்குமேல் நொடியாக இன்று போல் என்றும்
நாம் ஐயம் இன்றி உணரும் இப்பிரபஞ்சத்தில்
எம்மோடு இருப்பாயாக!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கும்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்