

யாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை மயில்வாகனம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19/08/2022.
எங்கள் எல்லோர் மனதிலும்
என்றும்
அணையாத தீச்சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கும்- தெய்வமே!
காதவழி தூரமெல்லாம்
கால் கடுக்க நடந்தாலும்
தேடாத
இடமெல்லாம்
தேடி நாம்
திரிந்தாலும் காணவில்லை
உங்களைப் போல துணை தனை!
அறிவூட்டி சீராட்டி வளர்த்த ஐயாவே!
அன்பும் அறிவும் பாசமும் தந்து
அரவணைத்து மகிழ்ந்தாயே
பொன்னான வாழ்வுதனை
போற்றி வளர்த்த ஐயாவே!
உங்களோடு மட்டுமல்ல
உங்கள் நினைவுகளோடும்
நாம் வாழ்ந்த நாட்களை
யார் மறப்பார்!
ஆண்டு முன்று
சென்றுவிட்டது- ஆனாலும்
உங்கள்
அன்பும் அரவணைப்பும்
என்றும்
எம்மை வழி நடாத்தி வாழ
வைக்கும்
என்றும் உங்கள்
ஆசியுடன் நாம் தொடருவோம்…
உம்மை நினைவு கூறும் மனைவி,
பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்