4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னம்மா பரராஜசிங்கம்
வயது 88

அமரர் சின்னம்மா பரராஜசிங்கம்
1932 -
2021
நயினாதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நயினாதீவு 3ம் வட்டாரம் வீரபத்திரர்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னம்மா பரராஜசிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும்
எங்களை பாதுகாத்த தெய்வமே
எங்கள் அனைவரையும் விட்டு பிரிந்தது ஏனோ?
துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
எங்களை உன் கண் இமைக்குள் வைத்து
நாம் வாழ வழிகாட்டினாய் - அம்மா
எம்மை எல்லாம் ஆழாத்துயரில்
ஆழ்த்தி விட்டு சென்றது ஏனோ?
ஆண்டுகள் பல ஆனதம்மா
உங்கள் நிழல்கள் அழியவில்லை
ஓயாது உங்கள் நினைவு எம்மை
வந்து துடிதுடிக்க வைக்குதம்மா!
ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட இருந்தாலும்
அன்னையே உன்னைப்போல் அன்பு கொள்ள யாருமில்லை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.....
தகவல்:
குடும்பத்தினர்
Deepest condolences your family we are never forget about your memories peace and rest