Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
பிறப்பு 25 SEP 1932
இறப்பு 10 SEP 2021
அமரர் சின்னம்மா பரராஜசிங்கம் 1932 - 2021 நயினாதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நயினாதீவு 3ம் வட்டாரம் வீரபத்திரர்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னம்மா பரராஜசிங்கம் அவர்களின் 45ஆம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

ஆயிரம் சொந்தங்கள்
அணைத்திட இருந்தாலும்
அம்மா உங்களைப் போன்று
அன்பு செய்ய யாரும் இல்லையே
நாற்பத்தைந்து நாட்கள் ஓடி மறைந்தாலும்
என்றும் உங்கள் நினைவுகள்
பல்லாண்டு காலம் வாழும் அம்மா!

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 24-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று Quartier Verein Gutschick- Mattenbach Scheidegg Str.19 8400 Winterthur என்ற இடத்தில் அந்தியேட்டி கிரியைகள் நடைபெறும். அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும், அன்னாரது துயரச் செய்தி அறிந்து தொலைபேசி மூலமும் நேரிலும் ஆறுதல் கூறியவர்கள், கண்ணீர் அஞ்சலி பிரசுரம் வெளியிட்டவர்கள், இரங்கல் உரை நிகழ்த்தியவர்கள் மற்றும் பல வழிகளிலும் உதவி செய்தவர்கள் அனைவருக்கும் எமது உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிறிபக்தலிங்கம் (பூசா ஸ்ரீ) - மகன்
சிறிராம் - மகன்
சிவசிறி(Winterthur- பிள்ளையார்) - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices