Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 SEP 1932
இறப்பு 10 SEP 2021
அமரர் சின்னம்மா பரராஜசிங்கம் 1932 - 2021 நயினாதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 29-08-2022

யாழ். நயினாதீவு 3ம் வட்டாரம் வீரபத்திரர்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னம்மா பரராஜசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் வீட்டு குல விளக்கே
அம்மா எமை விட்டு பிரிந்தது
ஏனோ அன்பின் நிறைவிடமே அம்மா

பாசத்தோடும் சிரித்த முகத்தோடும்
 கண்ணின் இமை போல் எமை
 காத்து துன்பம் துயரம் தெரியாது
எமை வளர்த்து தரணியிலே
எமை உயர வைத்து இன்பமுடன்
நாம் வாழ வழிகாட்டி எமை
எல்லாம் ஆளாத்துயரில் ஆழ்த்தி
விட்டு சென்றதேனதம்மா ஓராண்டு

ஓராண்டு காலமதில் உனை
பிரிந்து ஒரு நொடிப்பொழுதும்
உனை மறவாமல் நாம் வாழ்கின்றோம்
எத்தனை ஆயிரம் உறவுகள் எமை
அணைத்திட இருந்தாலும் அத்தனையும்
எம் அம்மாவுக்கு நிகராகுமா?

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos