Clicky

பிறப்பு 01 OCT 1946
இறப்பு 27 JUN 2019
அமரர் சிங்கராயர் கிருபைராணி
வயது 72
அமரர் சிங்கராயர் கிருபைராணி 1946 - 2019 உரும்பிராய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 03 JUL 2019 France

அன்பு நிறைந்த கிருபா அக்காவுக்கு எமது கண்ணீர் அஞ்சலி! பெரியன்னை பெற்றெடுத்த அழகு மலரே கிருபை அக்கா ! நீங்கள் தான் எங்கள் குடும்பத்தில் மூத்தவள் ! குடும்ப உறவுகளை பேணிக்காக்கும் பெருங்குணம் கொண்ட நல் மகள்! பெரியம்மா , இளையம்மா ஆசையம்மா மாமா, அழகம்மா ,சின்னம்மா .. ... எல்லோருக்கும் ஆசைமகள். செல்லமகள் ! அன்பும் உள்ளமும் நற் பண்புகளும் கொண்டு எமக்கெல்லாம் முன்மாதிரிகையாக திகழ்ந்தீர்கள் . உங்கள் ஒன்ற விட்ட சகோதரர்கள் யாவரையும் கூடப்பிறந்தவர்கள்போல் அன்பு காட்டி அரவணைத்தீர்கள்; உங்கள் பெற்றோரை அழைக்கும் போது கூட அக்கான்ர..... அம்மா அக்கான்ர ....ஐயா என்றுதான் நாம் கூப்பிடுவோம் . உங்களை வைத்திய சாலையில் உங்களை பார்க்க வந்தபோது *நீ என்னோடு நில்* என்று என் கைகளை பிடித்து கேட்டீர்கள். டாக்டரும் அனுமதி தந்தார் . இந்த துன்பமான வேதனை நிறைந்த நேரத்தில் உங்களுக்கு ஆறுதலாக நிற்பதில் என் மனது மகிழ்ச்சியடைந்தது . நோயின் பிடியில் சிக்கி உயிருக்காக போராடிய வேளைகளில் பதகளிப்பும் வேதனையும் அடைந்து என் நெஞ்சிலே சாய விரும்பி.. *இன்னும் கொஞ்சம் கிட்டவா உன் நெஞ்சில் சாயப்போறேன்* என்றீர்கள் மெதுவாக உங்கள் தலையை உயர்த்தி என் கைகளில் தாங்கிய போது என் நெஞ்சில் சிறிது நேரம் சாய்ந்து கொண்டீர்கள்! என் கரங்களை இறுக பற்றிக்கொண்டீர்கள் . வேதனை தாங்க முடியவில்லை! உங்கள் அன்புக்கணவரையும் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் இறுதி வரை இதயத்தில் சுமந்திருந்தீர்கள்! மொழி பேச வழியின்றி நீங்கள் மெளனித்துப்போன கணங்களில் நாமும் தவித்து நின்றோம் . உங்கள் பிரிவு எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது உங்கள் அன்புக் கணவரும் பிள்ளைகளும் . உங்களை மகிழ்விக்க நெஞ்சிலே தேக்கிவைத்த கனவுக் கோட்டைகள் யாவுமே ஒரு நொடியில் கலைந்து போனதே! புன்னகை தவழும் உங்கள் பூ முகம் எம் கண்முன் நிழலாக... உங்கள் இனிமையான மென்மையான பேச்சுமட்டும் எங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்க... ஈர விழிகளோடு எமது இதய அஞ்சலியை செலுத்துகின்றோம் ! இன்னும் தங்கள் பிரிவினால் துயருறும் அன்புக்கணவர் பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் சகோதரர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம் உங்கள் ஆன்மா சாந்தி பெறட்டும்!! ************ தங்கள் இளையம்மாவின் மகள் அன்பான தங்கை வனிதா