Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 OCT 1946
இறப்பு 27 JUN 2019
அமரர் சிங்கராயர் கிருபைராணி
வயது 72
அமரர் சிங்கராயர் கிருபைராணி 1946 - 2019 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி Civic Center ஐ வதிவிடமாகவும், பிரான்ஸ் Saint-Étienne ஐ  வதிவிடமாகவும் கொண்டிருந்த சிங்கராயர் கிருபைராணி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

உயிரோடு இருக்கும்போது என்னிடம்
நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்.

ஈரமாய் மனசுக்குள் அம்மா
ஈராண்டு கடந்தாலும் அம்மா!
ஈரமாய் எம் மனசுக்குள் நீதான் !
இருந்து இயக்குகின்றாய் இன்றும்
உன்னினைவோடு ..
வாடிப்போயிருக்கிறார் அப்பா !
இமையிரண்டும் தூங்கமறுக்கிறது !

 பூக்கின்ற பூக்களிலெல்லாம்
உன் முகம்தான் அம்மா !
புன்னகை பூத்து நிற்கிறது.

ஆயிரம் சந்திரர்கள் ஒன்றாய்
கூடிய நிலவாய் ..
எம் சிந்தையில் என்றும்
 எறிந்து நிற்கிறாய்
முந்தை நினைவோடு நாம்
உன்னைச் சுற்றிப் பறக்கின்றோம்.

வரமம்மா நீ
எமக்கு கிடைத்தது
தேய்பிறையானதில் இருந்து
இருள் சூழ்ந்து கிடக்கிறது எம் வானம்.
 எத்தனை ஆண்டுகளானாலும்
வளர்பிறையாய் மீண்டும் வா
வாஞ்சையோடு காத்துக்கிடக்கிறோம்.

 ஆண்டவரே அம்மாவிற்கு
முடிவில்லா அமைதியையும்
இளைப்பாற்றியையும் அளித்தருளும்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்