Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 OCT 1946
இறப்பு 27 JUN 2019
அமரர் சிங்கராயர் கிருபைராணி
வயது 72
அமரர் சிங்கராயர் கிருபைராணி 1946 - 2019 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி Civic Center ஐ வதிவிடமாகவும், பிரான்ஸ் Saint-Étienne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிங்கராயர் கிருபைராணி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம்மை விட்டு நீங்கள் சென்று
ஜந்து ஆண்டுக்கள்
ஆசைப்படி பேரனையும் உங்களுடன் சேர்த்து விட்டீர்கள்
அம்மா !

நாம் பட்ட வலிகள் ஏராளம்
நீங்க அறிவிரோ - உங்கள்
கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது...
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே !

வாழ்ந்த நாட்களை
வசந்தமாக்கி  சென்ற
எம் தெய்வத்தின் இழப்பு உறவுகளையும்
எம் உள்ளத்தையும் கதிகலங்க வைக்கின்றதேயம்மா...

ஆண்டு ஐந்து நொந்து நொந்து விழி நீர் சொரிந்து
காய்ந்த கன்னங்களில்
வடுமாறாப் பக்கங்கள் இன்னும் தொடர்கிறது தாயே !
மறுபடியும் வா எம் வாழ்க்கையிலே விளக்கேற்றி வை தாயே !

 அம்மா அம்மாவென்று  அழைக்கின்றோம்!
அம்மா அம்மாவென்று அழுகின்றோம்!
மெய்யாய் மேனியெங்கும்
உணர்வு குளிர் வரம் தா !

கனவுகளில் வந்து
ஆசிகள் தந்து  நினைவுகளில்
நீந்துகிறோம் அம்மா !
வருடங்கள் பல உருண்டோடினாலும்- உன்
உருவம் மனதுக்குள்ளே தெய்வமாய் நிற்குதம்மா !

நீங்கா நினைவுகளுடன்
கணவர் பிள்ளைகள்...!

தகவல்: மகள்- கல்பனா

கண்ணீர் அஞ்சலிகள்