யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி Civic Center ஐ வதிவிடமாகவும், பிரான்ஸ் Saint-Étienne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிங்கராயர் கிருபைராணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்துத் திங்கள் கருவில் சுமந்த அம்மா !
பன்னிரண்டு திங்கள் உன் பிரிவினில்
திக்குக்கு ஒருவராய் நாமிருந்தாலும்
திசைகள் ஒவ்வொன்றிலும் உன்முகமே!
ஆண்டொன்றானது உன் பிரிவு
நேற்றுப் போலிருக்கிறது நினைவில்
கொரோனா வந்தின்று
கூடி ஒன்றாய் உன்னினைவைப் பகிர
கொடுத்து வைக்கவில்லையே.
ஏனேய் ஏனேய் என்ற
அப்பாவின் தவிப்பு
ஆன்மாவை உலுப்புகிறது.
காரோடும் போது கூட
உன் குரல் அசரீதியாக என்
பின் தொடர்கிறது அம்மா !
தொலைபேசியில் உன்
குரல் கேட்காமல்
தவிக்கின்றாள் கல்பனா!
அம்மாவின் ஆசைகளை
நிறைவேற்ற முடியாத பரிதவிப்பில்
மூத்த மகள் புலம்புகின்றாள்.
அம்மா அம்மா வென்ற
மூத்த மகனின் குரல் கேட்டு
மெய்மறந்து நிற்ப்பீங்களே!
மாமியோடு குறும்பு கதைகள்
பேசி அன்பாக சீண்டும் மருமக்கள்
அமைதி காக்க ...
அம்மம்மாவின் மகிழ்சியை பார்க்க
ஆசையோடு காத்திருந்த
செல்லப்பேத்தி தன்
கனவுக் கோட்டை தகர்ந்தவளாய் நிற்கிறாள்.
ஒஸ்கார் உங்களோடு மெளன மொழியில் பேசுவது கேட்கிறதா!
பன்னிரண்டு பேரப்பிள்ளைகளும்
உங்கள் பாசத்துக்காக ஏங்க
நீங்கள் பிரிந்து ஆண்டொன்று ஆனதுவோ !
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
நினைவுகள் என்றும்
உங்களையே வட்டமிடும்
நீங்கா நினைவுகள் என்...
கணவர், மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்...
அன்பு நிறைந்த கிருபா அக்காவுக்கு எமது கண்ணீர் அஞ்சலி! பெரியன்னை பெற்றெடுத்த அழகு மலரே கிருபை அக்கா ! நீங்கள் தான் எங்கள் குடும்பத்தில் மூத்தவள் ! குடும்ப உறவுகளை பேணிக்காக்கும் பெருங்குணம் கொண்ட...