3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 OCT 1946
இறப்பு 27 JUN 2019
அமரர் சிங்கராயர் கிருபைராணி
வயது 72
அமரர் சிங்கராயர் கிருபைராணி 1946 - 2019 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி Civic Center ஐ வதிவிடமாகவும், பிரான்ஸ் Saint-Étienne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிங்கராயர் கிருபைராணி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. 

அம்மாவின் ஆன்மா இறைவனில்
மகிழ்ந்திருக்க மன்றாடுவோம்

தெய்வத்தின் மறுவுருவம் நீ
மீண்டும் பிறப்பொன்றிருந்தால்
உன் வயிற்றில் சேயாக வேண்டும்.

ஆண்டுகள் மூன்று உன்பிரிவு
அவனியில் கடந்தாலும்
மாண்டுபோன தடயமில்லாமல்
பவனி வருகிறாயம்மா தினம் நினைவில்

தாயாக, தாரமாக, மாமியாக, பேத்தியாக,
எம்முள் நின்று வழிநடத்திக் கொண்டிருக்கும் அம்மா !

எந்தப்பக்கம் திரும்பினாலும்
செந்தளிப்போடு வரவேற்கும் உன்முகம்.
வெற்றுப்பரப்பில் அப்பா..
அனுதினமும் உன் மனதோடு
கைகோர்த்து நடப்பதாக உணர்கிறோம்.

தாரமாக வந்தென்னை
மனிதனாக மீட்டெடுத்தாய்
என்னோடு பழகுவது பாவமென்று
விலகியோரையும் மீண்டு வந்து
பழகவைத்த பெருமை உந்தனது.

வேதமாக வந்தென்
வாழ்வில் விளக்கேற்றினாய்
இருளில் என்னை தவிக்கவிட்டு
இன்று நீ வானில் நட்சத்திரமானாய்.

எல்லாமுமாய் இருந்தவள் நீ
இல்லாமல் நானிருக்கும் பொல்லாத காலத்தில்
மனதுக்குள் உன்னோடு...
மணிக்கணக்காய் பேசுவதில்
ஆனந்தமான ஆறுதல் தருகிறாய்.

என்றும் உங்கள் நினைவுடன்
கணவர் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 29 Jun, 2019
நன்றி நவிலல் Wed, 31 Jul, 2019