7ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
வவுனியா பூந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், மகாறம்பைக்குளம் பிரதான வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சேது மகேஸ்வரி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்கள் மட்டும் உன்னுருவை காண்பதற்கு துடிக்கிறது!
காதுகளும் உன் குரலை கேட்டிடவே விரிகிறது !
சிந்தையிலே உன் நினைவு சிறகடித்து பறக்கிறது !
எண்ணங்களில் உன் நினைவு இறுக்கமாக அணைக்கிறது!
எம் அருகில் நீ இருந்த ஒவ்வொரு நொடிகளையும்
இன்னும் ஒரு தடவை மனதார உணர வேண்டும்
அம்மா என்று உன்னை மறுபடியும் அழைக்க வேண்டும்
மறு ஜென்மம் என்றொன்று மறக்காமல் மலரவேண்டும்
ஆண்டு ஏழு அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே அம்மா
என் செய்வோம் நாங்கள்?
ஏற்றமுடன் நாம் வாழ ஏணியாக இருந்து
எம்மை வழிநடத்த வேண்டும் அம்மா!
தகவல்:
சுவீந்திரன் மகன் - London.