5ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
                    Tribute
                    1
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
            
        வவுனியா பூந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், மகாறம்பைக்குளம் பிரதான வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சேது மகேஸ்வரி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 25/10/2024
எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை ஐந்தாண்டு கடந்ததை
அன்பின் சிகரமாய் அரவணைப்பின்
அர்த்தமாய் வாழ்ந்த எம் அன்னையே!
வார்த்தைகளில் வடிக்க முடியவில்லை
நீ இல்லா வெற்றிடத்தை
ஆண்டு ஐந்து கடந்தாலும் அம்மா
உன் இன்முகமும் புன்சிரிப்பும்
எம் மனதை விட்டகலவில்லை அம்மா!
உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
ஆனால் முழு நினைவாக
உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்....
                        தகவல்:
                        சுவீந்திரன் மகன் - London.