Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 SEP 1946
இறப்பு 31 OCT 2019
அமரர் சேது மகேஸ்வரி 1946 - 2019 பூந்தோட்டம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியா பூந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், மகாறம்பைக்குளம் பிரதான வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சேது மகேஸ்வரி அவர்கள் 31-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்ற அர்ச்சுணன், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், 

காலஞ்சென்ற சேது அவர்களின் அன்பு மனைவியும், 

மங்களேஸ்வரி, காலஞ்சென்ற சேது இரவீந்திரன்(பூசாரவி- புணர்வாழ்வு கழகத்தின் தலைவர்), ஜெயமணி(மாலா- திருகோணமலை), மகிழ்ந்தினி(மஞ்சு- வவுனியா), சுவீந்திரன்(லண்டன்), நர்மதன்(மகாறம்பைக்குளம்), சாந்திமலர்(பண்டாரிகுளம்), மயூரன்(மகேஸ்வரன் -பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

நாகராஜா(சது சேவிஸ் ஸ்டேஸன்- மகாறம்பைக்குளம்), மயில்வாகனம்(ஆளுநர் திணைக்களம்-திருகோணமலை), நாகராஜா(மாவட்டச் செயலகம்- வவுனியா, மத்தியஸ்தர் அறிவிப்பாளர்- வவுனியா), இராஜேஸ்வரி(ராஜி- லண்டன்), விக்கினேஸ்வரன்(நீதிமன்ற உத்தியோகத்தர்- வவுனியா), வேனுகா, புனிதா ஆகியோரின் அன்பு மாமியாரும், 

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், நாகராஜா(நாவற்குளம் ஓமந்தை), செல்லம்மா மற்றும் இராஜேஸ்வரி(பூந்தோட்டம்), காலஞ்சென்ற அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

ரிந்துஜா(ஐக்கிய அமெரிக்கா), திவ்வியா(திருகோணமலை), அபிலாஷினி(லண்டன்), திவ்வியரூபன்(கனடா), திலக்‌ஷன்(ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்- திருகோணமலை), தனுஸ்காந், லுக்‌ஷிகா, பிரகாசினி, விலோசன், சதுர்ஷா, சபிசன், டனுக்‌ஷா, தக்‌ஷன், டினேசி, பவிஸ்லா, சுலோஜனன், சுவேனி(லண்டன்), சுவீசன்(லண்டன்), சிரிசா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும், 

ரியா, ஆதிரா(ஐக்கிய அமெரிக்கா), கர்சிதா, திக்சனா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மனியளவில் மகாறம்பைக்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்