

யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும்,ஜேர்மனி, இத்தாலி Palermo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா ஞானசேகரம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை செல்வராசா(ஓய்வுபெற்ற தபால் ஊழியர்- வெற்றிலைக்கேணி முள்ளியான்), அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு இரண்டாவது மகன் ஆவார்.
இருபத்தைந்து ஆண்டுகளாக
ஏங்கித்தவிக்கும் உன் அம்மா,
உடன்பிறப்புகள், உறவினர்கள், நண்பர்கள்
தாங்கொணாத் துயரில் தவிக்குது
எம் நெஞ்சம் உன் பிரிவைத் தாங்குமோ
எம் இதயம்!!!
பாசமாக பண்பாக வாழ்ந்த நாட்களை
என்றும் என்னால் மறக்க முடியாது
எனது சின்னண்ணா என்று ஆசையாக
அழைத்த எனக்கு இன்று நீங்களில்லை
என்கின்றபோது என்னையறியாமலே
என் இதயம் கனக்கிறது
கலங்கிய விழிகளுடன் கண்ணீர்த்
துளிகளைக் காணிக்கையாக்கும்..
உங்கள் பிரியமான அன்புத் தம்பி செல்வராசா குணசேகரம்
எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம் அத்துடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ?