

யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், கன்னாதிட்டி, கிளிநொச்சி ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், பிரான்சை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை அன்னபாக்கியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மை இவ் உலகத்திற்கு ஈன்றவளே!
எமக்கு உயிர் உதிரம் தந்தவளே
அம்மா உன் உயிரணுவில் சுவாசிக்கின்றோம் தாயே
எம் உயிர் சுடரால் என்றும் ஒளி கொடுப்போம் -தாயே
உதிரத்தில் இருந்து எம்மை உயிர் பூவாய் நீ சொரிந்தாய்
உன் உயிரை நீ பிரிந்து எங்கம்மா நீ சென்றாய்!
உனக்கு நாம் விடை கொடுக்க எம் உள்ளம் ஒண்ணாது
நீ எமக்கு விடை கொடு எம் துயர் நீக்க வருவாயா!!
நேசித்த பூமியையும் உன் ஆன்மா காற்றினையும்
தரிசிக்க முடியாமல் தவிக்கின்றோம்
பெற்றவளே உன் மடி மீது தலை சாய்த்து
எம் துன்பம் சொல்லி அழ எமக்கு
ஒரு வாய்ப்பு தர வருவாயா எம் தாயே!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!