1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்லத்துரை அன்னபாக்கியம்
வயது 79

அமரர் செல்லத்துரை அன்னபாக்கியம்
1941 -
2021
இளவாலை மாரீசன்கூடல், Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், கன்னாதிட்டி, கிளிநொச்சி ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், பிரான்சை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை அன்னபாக்கியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா என்று அழைத்திட யாருண்டு
உயிராய் உனை நேசித்தோம்
உயிரினும் மேலாய் எமை நேசித்தீர்
வேதனையைச் சொல்லிட
வார்த்தைகள் இல்லையம்மா
வாழ்வில் பல உறவுகள் இருந்தாலும்
எம் தாய்க்கு நிகர் யாரோ
ஒரு பொழுதும் உமை
மறவாமல் நாம் இருந்தோம்
ஓயாது உம் குரல் இனிமை எதிரொலிக்க
ஒவ்வொரு கணமும் நினைத்து நினைத்து
அழுகின்றோம்...
நீங்கள் எங்களை விட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள் அன்பு முகம்
எம் நெஞ்சில் நிலைத்து நிற்கும்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிராத்திக்கின்றோம்...
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்