Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 DEC 1993
இறப்பு 24 AUG 2016
அமரர் சத்தியநாதன் கோபிகாந்தன்
வயது 22
அமரர் சத்தியநாதன் கோபிகாந்தன் 1993 - 2016 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சத்தியநாதன் கோபிகாந்தன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீ எம்மை பிரிந்து ஆண்டுகள்
எட்டு ஆகிய போதும்
எம் இதயத்தை விட்டு விலகாமல்
என்றும் எம்மோடு நீ இருப்பாய்!

கண்களை இமை காப்பது போல
நாம் காத்து வந்த எம் செல்ல மகனே!
 வையகத்தில் நீ வளமோடு வாழ்வாய் என
வாஞ்சையுடன் நாங்கள் கண்ட கனா ஏராளம்!

என் செய்வேன் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை
போன திசை எது என்று தெரியாது?

மொட்டாகி பூவாகி காயாகி
கனியாகும் வேளையில் காத்திருந்து
படைத்தவன் பழி தீர்த்தானோ?
உடல் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன எம் உயிரே!

உன்னை பிரிந்தே எங்கள்
உள்ளம் வாடுதே - பிரிவின்
தூரம் அறிந்தும்
உன்னைத் துரத்தித் தேடுதே!

எம்மோடு நீ வாழ்ந்த எழிலான வாழ்வை
என்றுமே நினைத்தபடி வாழ்கின்றோம்...

உந்தன் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்...

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

நித்தம் நித்தம் உன்னை நினைத்து
ஏங்கும் உன் அன்பு அப்பா, அம்மா.

தகவல்: குடும்பத்தினர்