Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 DEC 1993
இறப்பு 24 AUG 2016
அமரர் சத்தியநாதன் கோபிகாந்தன்
வயது 22
அமரர் சத்தியநாதன் கோபிகாந்தன் 1993 - 2016 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சத்தியநாதன் கோபிகாந்தன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் திருவுருவே மகனே
அலையும் அடித்து ஓய்ந்தது
காற்றும் வீச மறந்தது
 கடவுளும் கல்லாய் போனானே
 எம் செல்லம் கால் பதித்த போது
காத்திருந்து காலனவன்
சதி செய்தானே?

நீ பாசமாய் பார்க்கும்
பார்வை எங்கே?
நேசமாய் பகிர்ந்த
பேச்சு எங்கே?
 கண்களில் காட்டிடும்
கருணை எங்கே?
மண்ணில் எமக்கிருந்த
சுகம் எங்கே?

என்றெமைக் கலங்க விட்டதேனோ...!
 நிறைவேறா உன் ஆசைகளோடு
 விரைவாக ஏன் பிரிந்தாய்
 இவ்வுலகை விட்டு....?
என் செய்வேன் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை போன
திசை எது என்று தெரியாது....?

தகவல்: குடும்பத்தினர்