

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சத்தியநாதன் கோபிகாந்தன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்பது ஆனாலும் உம்
நினைவுகள் புரலாது எம் இதயத்தில்
அன்பு என்னும் பறவை
சிறகடித்து வானில் பறந்தது!
விதி என்னும் அம்பினால்
அது அடிபட்டு மாய்ந்தது!
வாழ்ந்த கதை முடியமுன்
இறந்திடவா நீ பிறந்தாய்!
நீ ஆண்ட கதை அழிவதில்லை
நீ எங்கே சென்றாய் தனியே!
பூவைப்போல் புன்னகை நிறைந்த - முகம்
கலகலப்பான பேச்சு கனிவான நல்லுள்ளம்!
அன்பை மட்டுமே அதிகமாய்ச் சுமந்த அதிசயம்
எங்கள் குடும்பத்தின் பொக்கிஷம் நீ!
எம் பிள்ளை போன திசை
எது என்று தெரியாது? கண்
இமைக்கும் நேரத்தில் காலன்
உனை கவர்ந்த வேளை காவலனாய்
நாமில்லை கதி கலங்கி நிற்கின்றோம்!
எம்மோடு நீ வாழ்ந்த எழிலான வாழ்வை
என்றுமே நினைத்தபடி வாழ்கின்றோம்...
உந்தன் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
நித்தம் நித்தம் உன்னை நினைத்து
ஏங்கும் உன் அன்பு அப்பா, அம்மா.