7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சத்தியநாதன் கோபிகாந்தன்
வயது 22
அமரர் சத்தியநாதன் கோபிகாந்தன்
1993 -
2016
புதுக்குடியிருப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சத்தியநாதன் கோபிகாந்தன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிப்பிக்குள் முத்தாய் அன்னையின்
கருவறையில் இப்புவியில் உதித்த
செல்கதிர் சுடரே ஏழு ஆண்டு கடந்த
பின்பும் ஓயவில்லை நினைவலைகள்....
மகனே என அணைக்க முடியாத
சோகத்தால்- எம் மனம் இருண்டு
போய் உள்ளதைய்யா.!
வாய் விட்டுச் சொல்லவும்
வார்த்தையில்லை மனம் விட்டுப்
பேசவும் இன்று நீ இல்லை என்
செய்வேன் எம் செல்லமே தேடுகின்றோம்
எம் பிள்ளை போன திசை
எது என்று தெரியாது? கண்
இமைக்கும் நேரத்தில் காலன்
உனை கவர்ந்த வேளை காவலனாய்
நாமில்லை கதி கலங்கி நிற்கின்றோம்!
ஐயகோ! இது என்ன விதியடா
வையகத்தில் வாழ ஆசைப்பட்ட
உன்னை காலன் பறித்தானோ!
நித்தம் நித்தம் உன்னை நினைத்து
ஏங்கும் உன் அன்பு அப்பா, அம்மா.
தகவல்:
குடும்பத்தினர்