முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சத்தியநாதன் கோபிகாந்தன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன்னை பிரிந்தே எங்கள்
உள்ளம் வாடுதே - பிரிவின்
தூரம் அறிந்தும் உன்னைத்
துரத்தித் தேடுதே!...
பூவைப்போல் புன்னகை நிறைந்த - முகம்
கலகலப்பான பேச்சு கனிவான நல்லுள்ளம்!
அன்பை மட்டுமே அதிகமாய்ச் சுமந்த அதிசயம்
எங்கள் குடும்பத்தின் பொக்கிஷம் நீ!
நேற்றுவரை நீ எம்முடன் வாழ்ந்து
நிறைவு கண்டதெல்லாம் நேற்றோடு போயிற்று - உன்
நினைவொன்றே எங்கள் வாழ்வாச்சு
ஐந்தாண்டு ஆனதய்யா!.
எங்கள் ஆனந்தம் தொலைந்ததைய்யா!..
மகனாய் தம்பியாய் நல்ல அண்ணனாய்
உயிர்க்கொடுக்கும் நண்பனாய்
எப்போதும் எம்மோடு இணைந்து நின்றவனே!
ஆண்டு ஐந்து அல்ல ஆயிரம் ஆனாலும்
மறக்க முடியாத மகத்துவம் நீ...
நினைவில், நித்திரையில், எம் உணர்வில்,
உள்ளத்தில் எப்போதும் - நீ
கனவில், கற்பனையில்
எம் கண்பார்க்கும் இடமெல்லாம் - நீ
நீ இல்லாத நாட்கள்
உயிரில்லாத நொடிகளாய் - போகுதய்யா..