கனடா Scarborough வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சைதனியா சிவரூபன் அவர்களின் நன்றி நவிலல்.
மழலைப் பேச்சோடு குறும்புத் தனமும் செய்து
சிட்டுக்குருவியாய் எமை வட்டமிட்ட நாட்கள்
எப்படி மறப்போம்!
அன்பின் திருவுருவே! அறிவின் பொக்கிசமே
அடக்கத்தின் தமிழ் மகளே தேம்பி அழுகின்றோம்
தேவதையே உனை எண்ணி தேடி அலைகின்றோம்
உன் திரு முகத்தை காண்பதற்கு
தூக்கம் கெடும்போதும் கொல்கிறது உன் நினைவு
தூங்கி எழும்போதும் கனக்கிறது எம் இதயம்
கட்டிய கோட்டையெல்லாம் கற்பனையாகியதே!
ஈன்றவள் பரிதவித்தாள் சுமந்தவன் பாவியானான்
காலனவன் கொடியவனே அறிந்திலனோ எங்கள் நிலை
வாழ்வு அது நிஜமில்லை
உணர்ந்தோம் உன் இழப்பால்
கடவுள் அவன் உண்மையில்லை
அறிந்தோம் இன்று உன் இறப்பால்
எனினும் பேதை மனம்…..
நீ வாழ்ந்த உலகம் இன்று உனக்காக தவிக்கிறது
உனது வரவை எண்ணி ஏக்கமுடன் காத்திருக்கு
ஒருமுறை வாராயோ உன் திருமுகம் காட்டாயோ
அழுத விழிகளுக்கு ஆறுதல் தாராயோ....
செல்வி சைதனியா சிவரூபன் அவர்களின் பிரிவுச்செய்தி கேட்டு நாம்
துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், மின்னஞ்சல்,
சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும்,
அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள்
சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு
சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக
மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Rest In Peace.