Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 MAY 2010
இறப்பு 16 MAR 2021
அமரர் சைதனியா சிவரூபன்
வயது 10
அமரர் சைதனியா சிவரூபன் 2010 - 2021 Scarborough, Canada Canada
Tribute 47 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கனடா Scarborough வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சைதனியா சிவரூபன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் வீட்டுத் தேவதை சைதனியாவுக்கு...

விண்ணுலகம் சென்றாலும் - எம்
கண்ணுலகில் வாழும் தேவதையே!
 ஐந்து ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
 ஆறவில்லை எம் நெஞ்சக் காயங்கள்...

துள்ளித் திரிந்த உன் பாதச் சுவடுகள்
இன்றும் எம் வீட்டில் தெரிகிறதே!
மழலை மாறா உன் புன்னகை பூக்கள்
எம் மனத் தோட்டமெங்கும் பூக்கிறதே!

கனடா மண்ணில் பூத்த மலரே - நீ
காலத்தின் கட்டாயத்தால் பிரிந்தாயோ?
அப்பா, அம்மா, தம்பி, தங்கை என
அனைவரையும் கண்ணீரில் நனைத்தாயோ?

பத்து வயதுப் பாவையாய் நீ இருந்தாய் - இன்று
தேவதையாய் இறைவன் மடியில் இருக்கிறாய்!
 உன் நினைவுகள் எம் வாழ்வின் உயிர்மூச்சு
நீ இல்லாத ஒவ்வொரு நொடியும் பெருமூச்சு!

ஐந்து அல்ல... நூறு ஆண்டுகள் கடந்தாலும்
எம் அன்புச் செல்வி சைதனியாவின் - நினைவு
என்றும் எம் இதயத்தில் நீங்காமல் இருக்கும்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices