கனடா Scarborough வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சைதனியா சிவரூபன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
வண்ணமாய் ஒடித்திருந்த எம்
வெண்ணிலவு நீ மறைந்தாய்,
எண்ணமெல்லாம் நிறைந்திருக்கும்
உன் நினைவுகள் மறையுமா அம்மா.?
நீண்ட எம் வாழ்வுக்கு
நீ தந்தாய் வசந்தங்கள் - இன்று
நீளமாய் நாட்கள் மட்டும்
நீ இல்லாத வெறுமைகளாய்.!
பத்து திங்கள் காத்திருந்தோம்
பனிமலராய் கரம் சேர்ந்தாய்,
பல திங்கள் கடந்துவிட்டோம்
பசுங்கிளியே நீ எங்கே.?
"சை"தன்யா என்றழைத்தோம் - எம்
முத்து மகள் நீயானாய்,
தனித்துவமாய் இருந்துவிட்டு
தனிமையையும் தந்துவிட்டாய்..!
உன்னோடு களிக்க வேண்டிய
எம் இனிய நாட்கள் எல்லாம்,
எம் கண்ணோடு வழியும்
கண்ணீருடனே கழிகின்றன....!!
இசையிருந்தும் நிசப்தமாய்,
அருவிக்குள்ளும் வறட்சியாய்,
பௌர்ணமிக்குள் கருமையாய்,
இருக்கின்ற அனைத்தினுள்ளும்
இல்லாமையே தெரிகின்றது
அழகு மகள் நீ இல்லா
அவஸ்தைமிகு இவ்வுலகு...!!
Rest In Peace.