Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 MAY 2010
இறப்பு 16 MAR 2021
அமரர் சைதனியா சிவரூபன்
வயது 10
அமரர் சைதனியா சிவரூபன் 2010 - 2021 Scarborough, Canada Canada
Tribute 46 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கனடா Scarborough வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சைதனியா சிவரூபன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

பத்துத்திங்கள் என்னுள்
பத்திரமாய் நீ..
உருவம் தெரியாத உனை அன்று
 உணர்ந்தே அன்பு கொண்டேன்

 பன்னிரு திங்கள் என்னுள்
சித்திரமாய் நீ இன்று
உயிரே நீ தான் என உருகி
 உயிரற்றும் வாழுகிறேன்.....

 கண்கள் கண்ட நிலவு கைகளுக்குள் நீயானாய்,
அள்ளி கொஞ்சும் போதெல்லாம்
 அழகுகொஞ்சும் மலரானாய்

பூமியவள் மேனிதனில்
 புல்நுனி நீராக,
புலர்பொழுது எல்லாமே
 புதுமையே நீயானாய்...!

முதல் மகவு நீயானாய்,
 முதல் மகளும் நீயானாய்,
முதல் கனவும் நீயானாய் - எம்
முதல் கவலையும் நீயானாய்...!!

எல்லாமே நீயானாய்- இன்று
எல்லாமே உன் நினைவாக...!!
காரிருளில் நாம் உனை தேட
கானலாகிப்போனாய் நீ...!!

கண்ட கனவுகளும்
 காணாத கனவுகளும்
 கண்களுக்குள் உனை
காட்டி செல்கின்றன....!!

நிற்கிறாய் ஓடுகிறாய்
விழிகளுக்குள்ளே...
தொட்டுத்தான் பார்க்கிறேன்
தொடர்கிறாய் நினைவாகவே...!

உன் நினைவுகளின்
 இனிமை மட்டுமே
இன்னும் எமை
 நிலைத்திருக்க வைக்கிறது..!

தாய்தேடி நீயும்
சேய்தேடி நாமுமாய்
வருடமாகியே போனது
 துயில்கொள் மகளே- எம்
தூரத்து நட்சத்திரமே..!!! 

தகவல்: குடும்பத்தினர்