லண்டன் Ealing ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரிஷான் உதயகுமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 07-07-2021
விண்ணோரும் தினம்
வியந்த எம் திருமகனே
ஏனோ? நாம் எல்லோரும் தினம்
கலங்க வைத்து போனது ஏனோ?
அன்று விண்ணோரும் - உனை
கவர்ந்து சென்றது தான் ஏனோ?
உள்ளம் உடைந்து கண்கள் கலங்கி
நெஞ்சம் உருகித் தவிக்கும்
எங்களின் நிலையை யார் தான் அறிவார் மகனே?
சத்தம் இல்லாமல் நித்தம் துடிக்க வைத்து விட்டு
மொத்தமாய் எம்மை மோசம் செய்ததேனோ?
கண்ணிமைக்கும் நேரத்தில் கவர்ந்து சென்ற
காலனவனின் கருணையற்ற செயலால்
கலங்குதையா எம் நெஞ்சம்
மகனே என்று உனை அழைக்க
அவனியில் நீ இல்லை-எனினும்
அலைமோதும் நினைவுதனில்
அழியாமல் நீ இருப்பாய் எம் குழந்தாய்
ஈரவிழிகளுடன்
நீங்காத நினைவுடன் வாழும்
அப்பா, அம்மா
சகோதரர்கள் குகன், கார்த்திக்
அப்பம்மா, அம்மம்மா, அம்மப்பா
மாமா, மாமிகள், சித்தப்பா
சித்தி, சகோதரிகள், மற்றும் மச்சான்கள்
உன் பிரிவால் வாடும் சொந்தங்கள்
Gone too soon ,never forgotten Eight years on ,and not a day goes by without thinking of you .I cannot bear the pain of losing you . you will always hold a special place in my life & remain forever...