4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 JUL 1999
இறப்பு 10 JUL 2018
அமரர் ரிஷான் உதயகுமார்
Old student of London QE Barnet Grammer School(Queen Elizabeth), 1st Year Student of Civil Engineering- University of Surrey
வயது 18
அமரர் ரிஷான் உதயகுமார் 1999 - 2018 Ealing, United Kingdom United Kingdom
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

லண்டன் Ealing ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரிஷான் உதயகுமார் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 26-06-2022

விண்ணோரும் தினம்
வியந்த எம் திருமகனே
ஏனோ? நாம் எல்லோரும் தினம்
கலங்க வைத்து போனது ஏனோ?
அன்று விண்ணோரும் - உனை
கவர்ந்து சென்றது தான் ஏனோ?.

உள்ளம் உடைந்து கண்கள் கலங்கி
நெஞ்சம் உருகித் தவிக்கும்
எங்களின் நிலையை யார் தான் அறிவார் மகனே?

நான் பார்க்கும் திசையெல்லாம்
உன் உருவே தெரியுதப்பா!!
நிஜத்திலே வந்துவிட்டால்
நிம்மதியாய் நாம் இருப்போம்
வாராது சென்றதனால்
தீராது சோகமப்பா!!!

மகனே என்று உனை அழைக்க
அவனியில் நீ இல்லை-எனினும்
அலைமோதும் நினைவுதனில்
அழியாமல் நீ இருப்பாய் எம் குழந்தாய்
ஈரவிழிகளுடன்

நீங்காத நினைவுடன் வாழும்
குடும்பத்தினர்...

தகவல்: உதயகுமார் & சிவகெளரி குடும்பத்தினர்

Summary

Photos

Notices